தமிழக செய்திகள்

அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

கரூரில் அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

சங்கிலி பறிப்பு

கரூர் மாவட்டம் புகழூர் சத்திரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவருடைய மனைவி சுதா (வயது 38). இவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சுதா தனது ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஈரோடு சாலையில் உள்ள தனியார் எண்ணெய் மில் அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்ம ஆசாமிகள் சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

அப்போது ஸ்கூட்டரில் இருந்து சுதா தவறி கீழே விழுந்தார். இதில், அவரது தோள்பட்டை, கை உள்ளிட்ட பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சுதாவை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து சுதா அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிவு செய்து பெண் டாக்டரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை