தமிழக செய்திகள்

ரெயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி மீது வழக்கு

ரெயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 66). ரெயில்வே ஊழியர். இவர் பொன்மலை சந்தைக்கு சென்று, கிரைண்டர் ஒன்றை விலைக்கு பேசினார். அப்போது பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வியாபாரி முருகேசனை எட்டி உதைத்து தாக்கினார். இது குறித்து பொன்மலை போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த உபகாரராஜ்(40) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT