தமிழக செய்திகள்

சென்னையில் மழையின்போது சாலையில் தென்பட்ட முதலை பிடிபட்டது..!

கிண்டி சிறுவர் பூங்காவிற்கு பிடிபட்ட முதலை கொண்டு செல்லப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் பலத்த மழை பெய்தது. அப்போது மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது. சர்வ சாதாரணமாக சாலையை கடந்து மறுபுறம் ஊர்ந்து சென்ற முதலையை கண்ட வாகன ஓட்டிகள், அதிர்ச்சியடைந்தனர். முதலை சாலையை கடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் பெருமழை, வெள்ளத்தின் பேது சாலையில் தென்பட்ட முதலையை வனத்துறையினர் பிடித்தனர். நெடுங்குன்றம் பகுதியில் முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அங்கு வந்த வன ஊழியர்கள், பேராடி முதலையை கயிற்றில் சிக்க வைத்து, பின்னர் வலையை விரித்து பிடித்தனர். பின்னர் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு பிடிபட்ட முதலை கெண்டு செல்லப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை