தமிழக செய்திகள்

கோவில், வீடுகளில் தொடர் திருட்டு

கோவில், வீடுகளில் தொடர் திருட்டு நடந்துள்ளது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு முடிந்து கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கோவில் கோபுரத்தின் மீது இருந்த கலசம் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் தர்மகர்த்தா நல்லுசாமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் கிருஷ்ணாபுரத்தில் அரும்பாவூர் சாலையில் உள்ள தில்சாத்பேகம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த தங்க மூக்குத்தி மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் கிருஷ்ணாபுரம் கே.கே.நகர் பகுதியில் உள்ள விஷ்ணு பிரியன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ.16 ஆயிரத்தை மர்மநபரகள் திருடி சென்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள தங்கவேல் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து அரும்பாவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்த தடையம் சேகரிக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்