தமிழக செய்திகள்

ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

திருத்தணி அருகே ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருத்தணி அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 48). இவர் புதிய பைபாஸ் சாலை பெட்ரோல் பங்க் அருகே சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பக்கோடா சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்துள்ளார்.

மேலும் கத்தியை காட்டி நரசிம்மனுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடையில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து நரசிம்மன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாலீசார் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பவன் குமார் (வயது 24) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து