தமிழக செய்திகள்

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை - செங்கல்பட்டில் அதிர்ச்சி

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை ஏற்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் ஊராட்சியில் 9-வார்டுகள் உள்ளன. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வரும் நீலா என்பவருக்கு எதிராக அதே பகுதியைச் சேர்ந்த 4- பேர் தீர்மானத்தில் கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்ட ஜூல்பிகார் என்பவர் மீது, சிலர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கெண்டு வந்த வார்டு உறுப்பினருக்கு அடி, உதை ஏற்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை