தமிழக செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. இதுவரை தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான எந்த திட்டங்களையும் கொடுக்கவில்லை. நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகரமான வசீகரமான பொய்யான திட்டங்களையே வாக்குறுதிகளாக தி.மு.க. கொடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. இதுவரை நிறைவேற்ற வலியுறுத்தவில்லை.

அ.தி.மு.க.வில் கடந்த தேர்தலில் தொடர்ந்த வெற்றிக் கூட்டணியே இந்தத்தேர்தலிலும் தொடரும். கூட்டணி கட்சிகள் கொள்கை குறித்து கருத்து சொல்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளுக்கு கூட்டணி கதவுகள் மூடப்பட்டுள்ளதால் தனித்து போட்டியிடுகிறார்கள்.

மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இல்லாத வகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து சிறப்பான வசதிகளுடன் அமைந்தே தீரும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் உள்ளது. ஆனால் பங்களிப்பு இல்லாத தி.மு.க. தான் குறை கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்