தமிழக செய்திகள்

கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராயம்பேட்டை- வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 62), விவசாயி.

நேற்று மாட்டுக்கு தண்ணீர் வைப்பதற்காக அருகில் உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்க கணேசன் இறங்கி உள்ளார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

வயலுக்கு சென்றவர் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்ல.

இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் கணேசன் பிணமாக மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கீழ்பென்னாத்தூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்தவரை மீட்டனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முனீஸ்வரன், உபயதுல்லாகான் ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு