தமிழக செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 7-ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் மட்டும் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, நாளை (வியாழக்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு