தமிழக செய்திகள்

நிதி நிறுவன ஊழியரை தாக்கிய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி அடுத்த அமத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 24). நிதி நிறுவன ஊழியர். இந்த நிலையில் பெத்தம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (28) என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சென்றாயன் வேலை செய்த நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றார். கடந்த மாதம் சக்திவேல் லோன் தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்றாயன், சக்திவேலுக்கு போன் செய்து லோன் தொகையை செலுத்துமாறு கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் (28) அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து சென்றாயனை தாக்கினர். இதுகுறித்து சென்றாயன் கொடுத்த புகாரின்பேரில் பெத்தம்பட்டி சக்திவேல் (28), அன்பு (27), கோவிந்தராஜ் (25), மாதன் கொட்டாய் மோகன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது