தமிழக செய்திகள்

கடத்தூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை; விவசாயி கைது

தினத்தந்தி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள அஸ்த்தகிரியூர் பகுதியை சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 37) என்பவர் அங்கு சென்று இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூச்சலிட்டவாறு அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணும், தாயாரும் சென்றாயன் வீட்டிற்கு சென்று கேட்டபோது அங்கிருந்த வாத்தியார் என்ற சென்னப்பன் என்பவர் பெண்ணின் தாயாரை கட்டையால் தாக்கினாராம்.

இதுகுறித்து இளம்பெண் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சென்றாயனை கைது செய்தனர். தலைமறைவான வாத்தியார் என்கிற சென்னப்பனை தேடி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து