தமிழக செய்திகள்

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பேரவை கூட்டம்

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பேரவை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 9-வது பொது பேரவைக்கூட்டம் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நிர்வாகக்குழுதலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் விசுவநாதன், சந்திரசேகரன், ஒன்றியக்குழுதலைவர் ஓம்சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார். கணக்கு அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் ஆண்டறிக்கை வாசித்தார். மேலாண்மை இயக்குனர் முத்துமீனாட்சி, உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வரும் ஆண்டு முதல் ஆலையில் சிறப்பு அரவை பருவத்தை தொடங்க வேண்டுவது, 5 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை திறன் கொண்ட ஆலையாக மாற்றுவது, விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் வெட்டு உத்தரவு வழங்க வேண்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் விஜயன், தொழிலாளர் நல அலுவலர் அருளானந்தம், தலைமை ரசாயனார் பாலசுப்பிரமணியம், தலைமை பொறியாளர் செந்தில்குமார், மருத்துவர் சீனு.காவியவேந்தன், ஆலையின் நிர்வாகக்குழு இயக்குனர்கள், விவசாய சங்க பிரதிநிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சிலர், கரும்பு வெட்டு உத்தரவு கால தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை