தமிழக செய்திகள்

இரும்பு சட்டங்கள் ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி

பேரணாம்பட்டில் இரும்பு சட்டங்கள் ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

தினத்தந்தி

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதி, அல்லி மஜித் தெருவை சேர்ந்தவர் மெகபூப்பாஷா, கூலி தொழிலாளி. இவரது மகன் அப்துல்ரஹ்மான் (வயது 17),

இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி தெருவில் உள்ள ஒரு இரும்பு வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை லோடு ஆட்டோவில் இரும்பு சட்டங்களை ஏற்றி கொண்டு அப்துல்ரஹ்மான் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

வீ.கோட்டா ரோடு தனியார் பள்ளி பின்புறம் அருகில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றபோது ஆட்டோவின் பின் சக்கரம் சேற்றில் சிக்கியது.

இதனையறிந்த அப்துல்ரஹ்மான் இறங்கி சென்று சேற்றில் சிக்கிய ஆட்டோவை தள்ள முயன்றபோது திடீரென ஆட்டோ கவிழ்ந்தது.

அப்போது இரும்பு சட்டங்கள் அவர் மீது விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்