தமிழக செய்திகள்

தேவகோட்டை நகராட்சி சார்பில் ரத்த தான முகாம்

தேவகோட்டை நகராட்சி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது

தினத்தந்தி

தேவகோட்டை, 

தேவகோட்டை நகராட்சியில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத்தலைவர் ரமேஷ், தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்று பேசினர்.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்திப் பேசினார். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம்சேசுரான், மருத்துவர் அழகுதாஸ், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசைராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை