தமிழக செய்திகள்

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் வாயிலாக அவ்வப்போது அனுப்பப்படுவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச போலீஸ் உதவியோடு, மிரட்டல் செய்யும் கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து ரெயில் நிலையத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் தீவிர சோதனையிட்டனர். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்