தமிழக செய்திகள்

கேபிள் டி.வி. ஊழியர் தற்கொலை

கூடலூரில் மகள் பினாயில் குடித்ததால் கேபிள் டி.வி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தேனி மாவட்டம் கூடலூர் 8-வது வார்டு காமராஜகவுடர் தெருவை சேர்ந்தவர் தேவா (வயது 39). தனியார் கேபிள் டி.வி ஊழியர். அவருடைய மனைவி கற்பகம் (35). இவர்களுக்கு மானஷா (16) என்ற மகள் உள்ளார். தேவா, மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த மகள் மானஷா, வெறுப்பு அடைந்து வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மகள் பினாயில் குடித்ததால் மனமுடைந்த தேவா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று தேவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை