தமிழக செய்திகள்

காவேரி மருத்துவமனை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆலோசனை

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து, காவல் துணை ஆணையர்களுடன் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். #Karunanidhi

சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அ நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. அந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார்.
கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்த நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஸ்டாலின், தயாளு அம்மாள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

ஏற்கனவே மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் சென்றுள்ள நிலையில், கனிமொழி மற்றும் பொன்முடி ஆகியோர் மீண்டும் வந்துள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் அதிக அளவில் கூடி வருகிறார்கள். திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளதால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து, காவல் துணை ஆணையர்களுடன் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?