தமிழக செய்திகள்

அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தினத்தந்தி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு, கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையிலும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் கட்சியினர் குரும்பலூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை