தமிழக செய்திகள்

தென்மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

பராமரிப்பு பணி

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளனூர்-புதுக்கோட்டை, மானாமதுரை - மேல கொன்னக்குளம், திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, திருச்சி - மானாமதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06829/06830) நேற்று முதல் வருகிற 15-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பிறநாட்களில் சிவகங்கை - மானாமதுரை இடையே இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை - நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) நேற்று முதல் வருகிற 15-ந் தேதி வரை, செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

இணைப்பு ரெயில் சேவை இருக்காது

அதே காலகட்டத்தில், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும். எனவே, மேற்கண்ட நாட்களில் இந்த ரெயிலுக்காக மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இணைப்பு ரெயில் சேவை இருக்காது.

மதுரையில் இருந்து தினமும் பகல் 11.30 மணிக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06663), செங்கோட்டையில் இருந்து நண்பகல் 11.50 மணிக்கு மதுரை புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06664) நேற்று முதல் வருகிற 15-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16868) நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும்.

79-வது நினைவு தினம்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?