தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு

திண்டுக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

சென்னையில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்தப்படுகிறது.

அதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு  நடைபெற்றது. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய வாகன அணிவகுப்பை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகன அணிவகுப்பு நாகல்நகர் ரவுண்டானா, அரசு மருத்துவமனை, திருச்சி சாலை, ஆர்.எம்.காலனி, தாடிக்கொம்பு சாலை, பழனி சாலை வழியாக வலம் வந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்