தமிழக செய்திகள்

அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

'மிக்ஜம்' புயல் தமிழக வடமாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இந்த புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 42 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்னர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து