தமிழக செய்திகள்

திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று விட்டு ரெயில் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

தினத்தந்தி

சென்னை,

வேலூரில் நேற்று தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றினார்.

முன்னதாக வேலூர் பள்ளிகொண்டாவில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை அவர் வெளியிட்டார். மேலும் மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற அரசு விழாவிலும் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.

இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்று விட்டு ரெயில் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை