தமிழக செய்திகள்

தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேரன்மாதேவியில் தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1 வருடங்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றிவிட்டு மண் சாலை அமைக்கப்பட்டது. இதனால் புழுதி பறந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே அப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, சேரன்மாதேவி - அம்பை பைபாஸ் சாலையில் யூனியன் அலுவலகம் அருகே நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு