தமிழக செய்திகள்

கொரோனா அச்சம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி - 2 பேர் உயிரிழப்பு

கொரோனா வந்த அச்சத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை அருகே கொரோனா வந்த அச்சத்தால் ஜோதிகா என்ற பெண் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். இதில் இளம்பெண் ஜோதிகா (வயது 23), ஜோதிகாவின் மகன் ரித்தீஸ் (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் ஜோதிகாவின் தாயார் லட்சுமி (46) ஜோதிகாவின் மற்றொரு மகன் சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா அச்சத்தால் 4 பேர் தற்கொலைக்கு முயன்று அதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றார். மேலும் எதுவாக இருந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என அச்சம் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை