தமிழக செய்திகள்

சேலத்தில்மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவுபோலீசார் விசாரணை

சேலத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சேலம்

சேலத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கியது

ஜார்க்கண்ட் மாநிலம் ஜல்தேகா சிம்தேகா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் லுகன் (வயது 19). இவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் அரங்கம் ஒன்றில் தங்கி இருந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ரஞ்சித் லுகன் மின்சார அடுப்பு மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது சுவிட்சில் கை வைத்த போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாபமாக இறந்தார்

பின்னர் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ரஞ்சித் லுகன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரஞ்சித் லுகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை