தமிழக செய்திகள்

சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணி தொடங்குவதில் தாமதம்

சிலர் தடைகளை உருவாக்கியதால் சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

தினத்தந்தி

சிவகாசி, 

சிலர் தடைகளை உருவாக்கியதால் சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

விலையில்லா சைக்கிள்

சிவகாசி முஸ்லிம் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் 142 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி. கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் வயது 127 ஆகும். காங்கிரஸ் சுதந்திரபோராட்டத்துக்கு பாடுபட்ட கட்சி. இந்தியாவுக்கு தியாகம் செய்த கட்சி. இந்தியாவை வளமான நாடாக மாற்ற தொடர்ந்து 70 ஆண்டுகள் முயற்சித்த கட்சி. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் இந்த கட்சியில் உள்ளனர். இதை அமித்ஷா மறந்துவிடுகிறார்.

தனியார்மயம்

கிரிக்கெட் மட்டையையே தொடாத அவரது மகனை இந்திய கிரிக்கெட் போர்ட் செயலாளராக அமரவைத்துள்ளார். இந்த போர்டில் பல கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் இருக்கிறது.

ரெயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவை மாற்றம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது. அவர் 4 முக்கிய துறைகளை கவனித்து வருவதால் அவரால் ரெயில்வே துறையை முழுமையாக கவனிக்க முடியவில்லை. ரெயில்வே துறையை தனியார் மயமாக்க தேவையான வேலைகளை வைஷ்ணவ் செய்து வருகிறார்.

மேம்பாலம்

இந்தியா கூட்டணியில் தற்போது 26 கட்சிகள் உள்ளன. இன்னும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது. சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு சிலர் தடைகளை உருவாக்கியதால் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் தாமதம் ஆகி வருகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் பாலம் அமைக்கும் பணி தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு மாநில செயலாளர் கணேசன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், பள்ளியின் தாளாளர் மொய்தீன் அப்துல்காதர் உள்பட பலர் உடனிருந்தனர். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்