தமிழக செய்திகள்

சாலை அமைக்கும் பணியில் தாமதம் - ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

சென்னையில் சாலை அமைப்பதில் தாமதம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமையேற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, புதிய சாலைகள் அமைக்க ஒப்பந்தம் கோரவும், ஒப்பந்த நிலையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

தண்டையார்பேட்டை, திரு.வி.க., நகர், ஆலந்துர், பெருங்குடி மண்டலங்களில், சாலைகளில் ஐந்து நாட்களுக்கு மேல் பணிகளை துவக்காத ஒப்பந்ததாரர்களுக்கு, 42 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை