மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய், சமூக பாதுகாப்பு தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன் பெறுமாறும், மேலும் இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளவிலான தற்போதைய போட்டோ-1, கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.