தமிழக செய்திகள்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

தினத்தந்தி

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் இருந்து பேரூராட்சிக்கு சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை பயனீட்டாளர் கட்டணம், குடிநீர் இணைப்பு கட்டணம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 810 பாக்கி நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இதை கட்ட சொல்லி விற்பனை கூட நிர்வாகத்தை பலமுறை வற்புறுத்தியும் நிலுவை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அரகண்டநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் உத்தரவின் பேரில், ஊழியர்கள் விரைந்து சென்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இது குறித்து செயல் அலுவலர் அருண்குமார் கூறும்போது, அரகண்டநல்லூர் பேரூராட்சி முழுவதும் உள்ள 12 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை வருகிற 10-ந் தேதிக்குள் கண்டிப்பாக செலுத்தி முடிக்க வேண்டும். இல்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை