கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வருகிற 24-ம் தேதி திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பு

திமுக அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்'' நடைபெறும்.

அதுபோது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை