தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் பலி

பேரளம் அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தா.

தினத்தந்தி

நன்னிலம்;

பேரளம் அருகே மாடு மேய்க்க சென்ற போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தா.

மின்சாரம் தாக்கியது

திருவாரூர் மாவட்டம் பேரளம் கொல்லுமாங்குடி அருகே உள்ள அகரமேடு கிராமத்தை சேர்ந்தவர் வேம்பு (55வயது). இவர் நேற்று மதியம் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் உள்ள வயலில் மேய்க்க சென்றார். அப்போது அங்கு வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வேம்பு எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் வேம்பு மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தா.

வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து பேரளம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேம்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை