தமிழக செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா

திருப்பத்தூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

திருப்பத்தூர் டவுன் சதாசிவம் தெருவில் மாட்டுப்பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், பெண்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காளையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கண்ணன் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி மேலாளர் குரிசல் மணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, திரைப்பட நடிகை சினேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை