தமிழக செய்திகள்

கூலித்தொழிலாளி வீட்டில் தீ

நத்தம் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

நத்தம் அருகே உள்ள ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் காந்தியம்மாள் (வயது 65). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது ஓட்டு வீட்டில், நேற்று காலை 9 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக காந்தியம்மாள் வீடு தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. 

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது