தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையால் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 18 விமானங்களும், அதேபோல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 18 விமானங்களும் என 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் சென்னையில் இருந்து கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை முதல் இயக்கப்பட வேண்டிய 5 விமான சேவைகளும், பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டிய 2 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பயண விவரங்களை அறிந்து கொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

டிட்வா புயல், கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரியில் இன்று விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் நேற்று விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து