தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

இட்டமொழி:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பர்கிட்மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 76 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் 10, 11, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ் கிங்ஸ்லி, வட்டார தலைவர்கள், கவுன்சிலர் தெய்வானை கனகராஜ், மகளிர் காங்கிரஸ் நிர்வாகி குளோரிந்தாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு