தமிழக செய்திகள்

பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

பொது விநியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும்.

இதுதவிர பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனுசெய்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்