தமிழக செய்திகள்

பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நடந்தது.

தினத்தந்தி

பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை சகோதரிகளாக பாவித்து இனிப்புகள் வழங்கினர். பின்னர் அந்த குழந்தைகளை அரவணைத்து பெண்களுக்கான பாலின குறியீடு வடிவத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது மடியில் அமர வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து தமிழாசிரியர் பாலமுருகன் கூறுகையில், பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள், பெண் குழந்தைகள் படித்தால் தான் வீடும், நாடும் நன்றாக இருக்கும் என்பதை உணர்த்தவே இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு எப்போதும் அன்பும் ஆதரவும் தேவை என்பதை நிரூபிக்கும் நிகழ்வே இந்த நிகழ்ச்சியாகும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து