தமிழக செய்திகள்

சிவகங்கை மாணவர்கள் சாதனை

மாநில கோ-கோ போட்டியில் சிவகங்கை மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தினத்தந்தி

காளையார்கோவில்,

பாரதியார் தினத்தையொட்டி 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கோ-கோ போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் ஹோலி ஸ்பிரிட் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். அதேபோல் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

மேலும் குடியரசு தினத்தையொட்டி 17 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கோ-கோ போட்டி தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் சிவகங்கை ஹோலி ஸ்பிரிட் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஹோலி ஸ்பிரிட் பள்ளி முதல்வர் அருட்சகோதரி கிரேசி சைமன், பள்ளி தாளாளர் அருட்சகோதரி லிடியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராஜா ஆகியோர் பாராட்டினர். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்