தமிழக செய்திகள்

தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவெனஅதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.640 உயர்ந்து ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000-க்கு விற்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து