தமிழக செய்திகள்

"அறிக்கையை படித்துவிட்டு பதில் சொல்கிறேன்'' முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்த அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அளித்த அறிக்கையில், சசிகலா, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பரிந்துரைத்து இருந்தார்.

அந்த விசாரணை அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுதொடர்பாக சட்டசபைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.விடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''அறிக்கையை முழுவதுமாக படித்துவிட்டு பதில் சொல்கிறேன்'' என்று பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை