தமிழக செய்திகள்

அந்தியூரில்ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.

அந்தியூர்

அந்தியூர் சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 வெற்றிலைகளை கொண்டது ஒரு கட்டு ஆகும். ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.180-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.200-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.50-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலை மாத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, மேட்டூர், தர்மபுரி, சத்தியமங்கலம், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது