தமிழக செய்திகள்

விளாத்திகுளத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விளாத்திகுளத்தில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தினத்தந்தி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் ராஜீவ் நகரில் அமைந்துள்ள பேச்சியம்மன், மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, யாத்ரதானம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் எடுத்து செல்லப்பட்டு விமான கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது, இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் சய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை