கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் 2-வது அணு உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு 2-வது அணு உலையில் உள்ள டர்பனில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால் அந்த உணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பழுதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் பழுது சரி செய்யப்பட்டு, 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது.

ஏற்கனவே கடந்த மாதம் 29-ந்தேதி கூடங்குளம் 2-வது அணு உலையில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து அந்த அணு உலையில் ஏற்பட்ட பழுதினை விஞ்ஞானிகள் சரி செய்த பின்னர் கடந்த 2-ந்தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த நிலையில் 2 வாரங்களில் மீண்டும் அந்த அணு உலை பழுதடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை