தமிழக செய்திகள்

பாதுகாப்பு குறைபாடு, பஞ்சாப் அரசின் கவனக்குறைவு - அண்ணாமலை குற்றச்சாட்டு

பிரதமரின் பயணம் குறித்து முன் கூட்டியே தெரிவித்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பிரதமரின் பயணம் குறித்து முன் கூட்டியே தெரிவித்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

தமிழக கவர்னருடன் பாஜக அண்ணாமலை சந்திப்புக்கு பின், பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு நீட் தேவை. நாளை நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு நீட் தேர்வு அவசியம் குறித்து பேசுவார். ஆளுநர் ரவியை பதவி விலக வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

பஞ்சாப்பில் பிரதமரின் பயணம் குறித்து முன் கூட்டியே தெரிவித்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வில்லை. பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அரசின் கவனக்குறைவே காரணம் என்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை