செங்கோட்டை:
செங்கோட்டை ரெட்போர்ட் ஜிம் அன் பிட்னஸ் மற்றும் ஐ.எப்.எப். சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி செங்கோட்டையில் நடந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீத்குமார் `மிஸ்டா தமிழ்நாடு-2022' பட்டம் வென்றார்.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா சிவபத்மநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா திவான் ஒலி, மாவட்ட பொருளாளா எம்.ஏ.ஷெரீப், மாநில பொதுக்குழு உறுப்பினா எஸ்.எம்.ரஹீம், நகர செயலாளா வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், ஐ.எப்.எப். மாநில செயலா ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.