தமிழக செய்திகள்

என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை- ஜெயக்குமார் பேட்டி

100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார் .

தினத்தந்தி

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறியதாவது,

100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பினர். வாக்குப்பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை.  பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம். இவ்வாறு அவர் கூறினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து