தமிழக செய்திகள்

மரக்காணம்: விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் டிஸ்சார்ஜ்

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த 22 பேர் தற்போது சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்தத்தில் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு முதல் அமைச்சர் நிதி உதவி அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, விஷ சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 15 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 39 பேரில் 22 பேர் தற்போது சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை