தமிழக செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் - கமல்ஹாசன்

அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரசும் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன.

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டினால், அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்பதை அறிந்தும் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரசும் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன.

இரு மாநில மக்களின் நல்லுறவை சீர்குலைக்கும் இந்தத் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தன் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது