தமிழக செய்திகள்

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து

25ம் தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

நீலகிரி,

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. தொடர் கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை 22-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தொடர் சீரமைப்பு பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரெயில்  போக்குவரத்து ரத்து மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25ம் தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை