தமிழக செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி கட்டிடம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சி கட்டிடம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.

தினத்தந்தி

தாம்பரம்,

புதிதாக உருவாக்கப்பட்ட சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு தனி கட்டிடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சி செயல்பட்டு வந்த கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களுக்கு அந்த இடம் போதுமானதாக இல்லை. எனவே தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு புதிதாக கட்டிடம் கட்ட தாம்பரம் சானடோரியம் காசநோய் ஆஸ்பத்திரி வளாகத்தில், வெளி நோயாளிகள் பிரிவு இயங்கிய இடத்தில் 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டிடம் அமைய உள்ள இடத்தில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், கவுன்சிலர் சிட்லபாக்கம் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை